போலீஸ் டைரி 2.O ஒரு அட்டகாச முயற்சி
வெறும் உள்ளங்கையில் உலகம் என்ற நிலைக்கு நாம் மாறிவந்து வெகுகாலம் ஆகிவிட்டது. திரையரங்குகளில் பார்த்த படங்களை பணம் கொடுத்து இப்போது மொபைலிலே பார்த்து வருகிறோம். அதுபோல் தொலைக்காட்சியில் பார்த்த தொடர்களை சற்று வேறு வடிவத்தில் வெப்சீரிஸாக போனில் பார்த்து வருகிறோம். தொலைக்காட்சி தொடர்கள் 1000 எபிசோட் வரைக்கும் செல்லும். வெப்சீரிஸ் வெறும் 10 தொடர்களுக்குள் முடிந்துவிடும். ஒரு திரைப்படம் போலவே வெப்சீரிஸை எடுத்து வரும் போக்கு தற்போது தமிழில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஜீ5 தரமான வலைத்தொடர்களை இறக்கி வருகிறார்கள். அவர்களின் வெளியீட்டில் ஆட்டோ சங்கர் வலைத்தொடர் அதிரிபுதிரி ஹிட் அடித்தது. தற்போது போலீஸ் டைரி 2.O என்ற வலைத்தொடர் வந்துள்ளது. நேற்று இத்தொடரின் இரண்டு எபிசோடுகள் மட்டும் பத்திரிகையாளர்களுக்கு பிரத்யேகமாக திரையிட்டுக் காட்டப்பட்டது. அந்த இரண்டு எபிசோடுகளுமே ஒரு படத்திற்கான கண்டெண்ட் மற்றும் மேக்கிங்கோடு இருந்தது. இந்தத் தொடர் நிச்சயம் பெரும்வரவேற்பைப் பெரும் என்று ஜீ5 டீம் நம்புகிறது