‘எட்டு தோட்டாக்கள்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா, ப்ரியா பவானி சங்கர், ராதிகா, ராதாரவி மற்றும் பலர் நடித்து வரும் திரைப்படம் “குருதி ஆட்டம்”. ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முருகானந்தம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கிறது.
படத்தில் அதர்வாவின் தலையீடு நிறைய இருந்ததாக செய்திகள் வந்தனவே என்று பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த இயக்குநர் ஸ்ரீகணேஷ், “தொடர்ந்து வெற்றிப்படங்கள் கொடுத்து வரும் நடிகர்கள் சில இயக்குநர்களிடம் கதையில் இதை மாற்றுங்கள், அதை மாற்றுங்கள் என்று ஆலோசனை சொல்வார்கள். ஆனால் அதர்வா அப்படி எதுவும் செய்யவில்லை. படத்தின் கதையினைக் கேட்டு நடிக்க முடிவு செய்தவுடனே தன்னை முழுவதுமாக என்னிடம் ஒப்படைத்துவிட்டார்.” என்று கூறியுள்ளார்.