Tamil Movie Ads News and Videos Portal

”கைலாசா தீவில் ராஷ்மிகா மந்தனாவுடன்” – ஹரிஷ் கல்யாண்

சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியதைத் தொடர்ந்து தலைமறைவானார். போலீசார் அவரைத் தேடி வரும் நிலையில் ஈக்வடார் நாட்டில் இருக்கும் கைலாசா தீவை விலைக்கு வாங்கி அங்கு செட்டில் ஆகிவிட்டதாக தகவல்கள் வெளியானது. தற்போது அந்தத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மீம்ஸ் கிரியேட்டர்கள்

பலவிதமான மீம்ஸ்களை வெளியிட்டு வருகிறார்கள். சமீபத்தில் நடந்த ஒரு டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ஹரிஷ் கல்யாணிடம் “நீங்கள் கைலாச தீவிற்குச் செல்ல வாய்ப்பு கிடைத்தால் எந்த நடிகையோடு செல்ல ஆசைப்படுகிறீர்கள்” என்று கேட்டதற்கு “ராஷ்மிகா மந்தனாவுடன் செல்ல விரும்புகிறேன். இப்போது இருக்கும் நடிகைகளில் எனக்கு அவரைத் தான் மிகவும் பிடித்திருக்கிறது என்று பதிலளித்துள்ளார்.