Tamil Movie Ads News and Videos Portal

அஸ்வின்ஸ்- விமர்சனம்

தமிழில் சில காலங்களுக்குப் பின் சைக்காலஜிக்கள் ஹாரர் கதையோடு வந்திருக்கிறது அஸ்வின்ஸ் படம்

ஒரு யூட்யூப் சேனல் கன்டென்ட்டுக்காக லண்டனில் கடல் அருகேயுள்ள ஒரு மேன்சனுக்கு செல்கிறார்கள் வசந்த் ரவி உள்பட ஐந்துபேர்கள். அந்த மேன்சனுக்கு மிகப்பெரிய பின்கதை ஒன்றுண்டு. ராட்சர்கள் vs நல்லவர்கள் என்ற கான்செப்டில் அமைந்துள்ள அந்தப் பின்கதையில் ஒரு மர்மம் இருக்கிறது. அந்த மர்மத்தின் பின்னணி என்ன? வசந்த் ரவி உள்பட அந்த ஐவரும் பத்திரமாக மீண்டு வந்தார்களா? என்பதே அஸ்வின்ஸ் கதை

தான் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்களில் டெக்னிக்கல் டீம் மட்டும் வேறலெவலில் இருக்கும் என்பதை இந்தப்படத்தின் மூலமும் உறுதி செய்துள்ளார் வசந்த் ரவி. அபாரமான டெக்னிக்கல் டீம். வசந்த் ரவி ஒரு நடிகராக அடுத்தப்பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறார். இருவேறு பாரிணாமங்களை பிசிறு தட்டாமல் திரையில் காட்டியுள்ளார். அவரோடு சேர்ந்து விமலாராமன், சரஸ்வதி மேனென், முரளிதரன், உதயாதீப் உள்பட அனைவருமே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இவர்கள் ஐவரின் முகமும் நிஜமாகவே ஒரு பேய்வீட்டில் மாட்டிகொண்டவர்களை பிரதிபலிக்கிறது.. சபாஷ்!

இந்தப்படத்தின் உச்சநட்சத்திரங்கள் நிச்சயமாக கேமராவிற்கு பின்னால் உழைத்தவர்கள் தான். கஞ்சனின் கதை மூட்க்கு ஏற்ற காஸ்ட்யூம் டிசைன்ஸ் வொர்க் ஆகட்டும், சச்சின் மற்றும் ஹரியின் மிரட்டலான சவுண்ட் டிசைன் ஆகட்டும் மிரட்டலோ மிரட்டல். பின்னணி இசையில் கொலமாஸ் காட்டியுள்ளார் விஜய் சித்தார்த். டான் பாலாவின் ஆர்ட் வொர்க்கில் பல புதிய அனுபவங்கள் கிடைக்கின்றன. AM.எட்வினின் கேமரா வொர்க் படம் முடிந்த ஒருநாள் கழித்தும் நம் கண்களை வியக்க வைத்துக்கொண்டே இருக்கிறது. என்னவொரு ஆங்கிள்ஸ்! அமேசிங். எடிட்டர் வெங்கட் ராஜனின் உழைப்பு அதி அபாரம்!
ஒட்டுமொத்த டெக்னிக்கல் ஜாம்பவான்களையும் ஒருங்கிணைத்து வேலை வாங்கிய இயக்குநரின் திறன் உலகத்தரத்திற்கு ஒப்பானது எனலாம்

ஐந்து பேர் சேர்ந்து ஒரு தேவைக்காக லண்டன்ல உள்ள ஒரு வீட்டுக்குப் போறாங்க. அங்கு பேய் இருக்கு..அந்தப்பேய் யார்? அதோட மோட்டிவ் என்ன? எனச் சொல்வதற்கு எளிதாகத் தோன்றும் இந்தக் கதையில் திரைக்கதையால் சுழன்றடித்துள்ளார் இயக்குநர். யூகிக்க முடியாத காட்சி நகர்வுகள் இருக்கையில் கட்டிப்போடுகிறது. கதை மாந்தர்களோடு கதையைக் கட்டிப்போட்டது போல நம்மையும் நாயகன் டீமோடு கனெக்ட் செய்திருக்கலாம். அவர்களோடு நமக்கு சற்று எமோஷ்னல் நெருக்கம் குறைவாக இருப்பது ஒரு சின்ன குறைபாடு. மற்றபடி இந்த அஸ்வின்ஸ் விஷுவலாக தொட்டிருக்கும் உயரம் தமிழ்சினிமாவில் ஒரு எவரெஸ்ட் ரேஞ்ச்
3.5/5
-மு.ஜெகன் கவிராஜ்