Tamil Movie Ads News and Videos Portal

வசந்த் ரவி நடிக்கும்“ASVINS”!

தரமணி (2017) & ராக்கி (2021) ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகரான வசந்த் ரவி, தற்போது சைக்கலாஜிக்கல் ஹாரர் த்ரில்லரான ‘ASVINS’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

திரைக்கதை ஆசிரியரும் இயக்குநருமானமான தருண் தேஜா, இந்தியாவின் சென்னை மற்றும் ஜெர்மனியின் வொல்ப்ஸ்பர்க் என இரண்டையும் தனது இருப்பிடமாகக் கொண்டுள்ளார். அவரது சிந்தனையைத் தூண்டும் குறும்படங்களுக்காக அவர் பல விருதுகளைப் பெற்றுள்ளார். அவற்றில் சில பல்வேறு ஐரோப்பிய சர்வதேச திரைப்பட விழாக்கள் மற்றும் ஐரோப்பாவில் உள்ள சுயாதீன திரைப்பட கம்யூனிட்டியில் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. தருண் இப்போது தனது 20 நிமிட பைலட் திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்ட ‘ASVINS’ மூலம் இயக்குநராக அறிமுகமாக உள்ளார். இது குறும்படமாக வெளியான போதே விமர்சகர்களையும் பார்வையாளர்களையும் திகைக்க வைத்து பாராட்டுகளைப் பெற்றது. இருளில் இருந்து மனித உலகிற்கு தீமையை கட்டவிழ்த்துவிடும் 1500 ஆண்டு பழமையான சாபத்திற்கு அறியாமலேயே பலியாகும் யூடியூபர்கள் குழுவைச் சுற்றி வரும் இந்தத் திரைப்படம் ஒரு சைக்காலஜிக்கல்- ஹாரர் வகையைச் சேர்ந்தது. இத்திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ராவின் (எஸ்விசிசி) பிவிஎஸ்என் பிரசாத் தயாரித்துள்ளார். பாபிநீடு பி இந்தப் படத்தை வழங்குகிறார் மற்றும் இணைத் தயாரிப்பாளராக பிரவீன் டேனியல் உள்ளார்.

விமலா ராமன், முரளிதரன் (“ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்” படப்புகழ்), சரஸ் மேனன், உதய தீப் (“நிலா கலாம்” திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற நடிகர்) மற்றும் சிம்ரன் பரீக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.இப்படத்திற்கு விஜய் சித்தார்த் இசையமைக்கிறார். எட்வின் சகே ஒளிப்பதிவு செய்கிறார் மற்றும் வெங்கட் ராஜன் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.