Tamil Movie Ads News and Videos Portal

அசுரன் ரீமேக்கில் ப்ரியாமணி

வெற்றிமாறன இயக்கத்தில் தனுஷ், மஞ்சுவாரியர், பசுபதி, கென் ஆகியோர் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றிபெற்றத் திரைப்படம் “அசுரன்”. எழுத்தாளர் பூமணி எழுதிய ‘வெக்கை’ என்ற நாவலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இப்படம் பிற மொழிகளிலும் ரீமேக் செய்யப்படவிருக்கிறது. தெலுங்கில்

அசுரன் ரீமேக்கில் தனுஷ் நடித்த கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடிக்கவிருக்கிறார். தெலுங்கில் இப்படத்தை ஸ்ரீகாந்த் அடாலா இயக்குகிறார். மஞ்சு வாரியர் நடித்த கதாபாத்திரத்தில் ஸ்ரேயா நடிக்கவிருப்பதாக முதலில் தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது மஞ்சு வாரியர் நடித்த கதாபாத்திரத்தில் ப்ரியாமணி நடிக்கவிருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.