வித்தியாசமான டைட்டிலால் கவனம் ஈர்த்த படம் அஷ்டகர்மா. கர்மா தான் மக்களின் இயக்கத்திற்கான மெயின் காரணி என்பது பல்லோரின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையை அடிப்படையாக வைத்தே கதை செய்திருக்கிறார் இயக்குநர் விஜய் தமிழ்செல்வன்
பேய் பில்லி சூனியங்கள் போன்றவற்றை நம்பாத ஹீரோ எப்படி அதற்குள் மாட்டிக்கொன்டு மீண்டெழுகிறார் என்பதாக கதை விரிகிறது. படத்தின் டைட்டில், டி.ஆர் வைத்து ஒரு ப்ரமோஷன் சாங், என படத்தை வெகுஜன மக்கள் பார்க்கக்கூடிய அளவில் டிசைன் செய்துள்ள இயக்குநர் திரைக்கதையில் அதிகம் கவனம் செலுத்தியிருக்கலாம்
C.S.கிஷன்! இவர் தான் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் ஹீரோ. உணர்வுகளை சரியாக வெளிப்படுத்த நிறைய இடங்களில் தடுமாறினாலும் ஒருசில இடங்களில் ஸ்கோர் செய்கிறார். தமிழ் பையன் லுக் அவருக்கு வர அவரது முகமொழிகள் இன்னும் மாறவேண்டும். மற்ற ஆர்ட்டிஸ்ட்கள் எல்லோருமே கொடுத்த வேலையை மட்டும் செய்திருக்கிறார்கள்…
படத்தின் இசை தான் படத்தை கஷ்டகர்மாவில் இருந்து காப்பாற்றி இருக்கிறது. ஒளிப்பதிவும் ஓரளவு தரமாகவே அமைந்துள்ளது. நல்ல திரில்லர் வகை கன்டென்ட் என்பதால் திரைக்கதையில் பல சித்து விளையாட்டுக்களை இயக்குநர் செய்திருக்கலாம். படம் நெடுக இயக்குநரின் முயற்சி மட்டுமே தெரிகிறது. அந்த முயற்சி முதிர்ச்சியாக மாறி இருந்தால் படம் ரசிகர்களுக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்திருக்கும்
-மு.ஜெகன் கவிராஜ்