‘சூரரைப் போற்று’ திரைப்படத்தைத் தொடர்ந்து சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கப் போய்விட்டதால் சூர்யா தனது அடுத்த படத்திற்காக மீண்டும் இயக்குநர் ஹரியுடன் இணைந்துள்ளார். இப்படம் தொடர்பான அப்டேட் நேற்று மாலை அறிவிக்கப்படும் என்று கூறிய இருந்த நிலையில், சூர்யா-ஹரி இணையும் புதிய படத்தின் தலைப்பு “அருவா” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யா – ஹரி கூட்டணியில் இதற்கு முன் உருவாகிய ஆறு, வேல், சிங்கம் போன்ற படங்களிலும் அருவா கலாச்சாரம் இருக்கும். அது போல இந்தப் படமும் கிராமத்துப் பின்னணியில் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருக்க, படத்தின் தலைப்பிலேயே அருவா-வை வைத்து ஆச்சரியப்படுத்தியிருக்கின்றனர். அருவா கலாச்சாரம் விடாமல் இயக்குநர் ஹரியை துரத்துகிறதா..? இல்லை சூர்யாவைத் துரத்துகிறதா..? என்று தெரியவில்லை.