சுசீந்திரனின் பாண்டியநாடு படம் மூலமாக அறிமுகமானவர் அருண்மொழித் தேவன். சொந்த ஊர் முதுகுளத்தூர் பக்கம் கூவர்கூட்டம். இவர் தாத்தா கடலாடி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ, அப்பா கவுன்சிலர். இன்ஜினியரிங் பட்டதாரியான இவர் படித்தது கோயமுத்தூரில்.
படிப்பை முடித்ததும் கோயமுத்தூர் ஏர்போர்ட் அருகே ரெஸ்டாரெண்ட் துவங்கினார். அதில் எல்லாம் நாட்டம் இல்லாமல் அவருக்கு சினிமாவே பேஷனாக இருந்தது.
பாடலாசிரியர் ஞானக்கரவேல் இவரது உறவினர் அவர் மூலமாக சினிமாவில் தனது பயணத்தை தொடங்கினார். சுசீந்திரனின் பாண்டியநாடு, முத்தையாவின் கொம்பன், சண்டிவீரன், மதுரைவீரன், ஜிங்கா, சமுத்திரகனி தம்பியாக கூட்டத்தில் ஒருவன், க/பெ ரணசிங்கம் இவர் நடித்த படங்களில் நடித்திருக்கிறார்.
அறம், பவர்பாண்டி, க/பெ ரணசிங்கம், ராவணகூட்டம் என பத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு லொக்கேஷன் மேனேஜராகவும் பணியாற்றியுள்ளார்.
சமீபத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான “காரி” ஹிட் படத்தில் மெயின் வில்லனானார்.
“காரி” படத்தின் இயக்குனர் ஹேமந்த் லொக்கேஷன் பார்க்க ராமநாதபுரம் வந்தார். எனக்கு சொந்த ஊர் என்பதால் படத்தின் கதைக்கேற்ப நிறைய இடங்களுக்கு அவருடன் பயணித்தேன். அப்போது இந்த வில்லன் கேரக்டர் இருக்கு நீங்க கரெக்டா இருப்பீங்கனு மேக்கப் டெஸ்ட் செய்தார். நேட்டிவிட்டி முகம், மீசை என எல்லாமும் கனகச்சிதமாக பொருந்தி போகவே எனக்கு இந்த செல்வம் கதாபாத்திரத்தை கொடுத்தார். என்மேல் நம்பிக்கை வைத்து இந்த கேரக்டரை கொடுத்த காரி டைரக்டர் ஹேமந்த் சாருக்கு என் நன்றிகள் என பணிவாக தெரிவித்தார்.
தற்போது ஜெயம்ரவி தம்பியாக “சைரன்” படத்தில் முக்கிய வேடத்திலும், இன்னும் பெயரிடப்படாத இரண்டு படங்களில் மெயின் வில்லனாக நடிக்க இருக்கிறார்.
அருண்மொழித்தேவன் தொடர்ந்து நடிகரகாவும் லொக்கேஷன் மேனேஜராகவும் பயணப்படுகிறார். வில்லன் நடிகர்கள் வெகுவாக குறைந்துவிட்ட தமிழ்சினிமாவில் ரகுவரன், பிரகாஷ்ராஜ், ஆனந்த் ராஜ் வரிசையில் அருண்மொழித்தேவன்
விரைவில் இடம் பிடிப்பார்.