Tamil Movie Ads News and Videos Portal

சீமான் பாராட்டிய ‘ஆட்டிகல் 41’ படப்பாடல்..

ஜி. எம். கிரியேட்டர்ஸ் சார்பாக எம். கோவிந்தசாமி தயாரித்து எஸ். ஜி. சிவகுமார் இயக்கியுள்ள படம் ‘ஆர்டிகல் 41’.பாலுசே, சிந்து, சூரியமூர்த்தி, சரண்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர் . ஷாஜகான் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தின் பாடல் சமீபத்தில் வெளியானது .

சமூக அவலங்களை எடுத்துரைக்கும் “சர்க்காரு வேலதான்” என்ற பாடலை கேட்ட சீமான் அவர்கள் பாராட்டி இந்த பாடலை வெளியிட்டுள்ளார்.

அரசாங்க வேலைக்கு கடன் வாங்கி பணத்தை கட்டும் ஒருவன் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தான் படத்தின் கரு.பல சர்வதேச விருதுகளை வென்றுள்ள இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.