சூர்யா இயக்குநர் ஹரியுடன் 6வது முறையாக இணையும் படத்திற்கு “அருவா” என்று பெயர் சூட்டப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கவிஞர் ஏகாதசி இயக்கத்தில் ஏற்கனவே “அருவா” என்ற பெயரில் ஒரு படம் உருவாகி தற்போது திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகள் வென்று வருவதால் சூர்யா குழுவினர் படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என்று வலியுத்தப்பட்டது. ஆனால் அதற்கு சூர்யா குழுவினர் செவி சாய்ப்பதாக தெரியவில்லை.
அருவா படத்தின் தயாரிப்பாளரான ஞானவேல்ராஜா படம் குறித்துப் பேசும் போது, “ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த ஆறு, வேல் போன்று இப்படமும் குடும்பம் சார்ந்த செண்ட்மெண்ட் படமாக இருக்கும். மக்கள் குடும்பம் சார்ந்த உறவுக் கதைகளை விரும்புவதால் தான் ‘விஸ்வாசம்’ போன்ற படங்கள் வெற்றிபெறுகின்றன. இப்படமும் முந்தைய சுர்யா-ஹரி கூட்டணி படங்களில் இருந்து கண்டிப்பாக வித்தியாசமான ஒரு அனுபவத்தைக் கொடுக்கும். ‘அருவா’ என்பது கிராமத்தன்மையுடன் இருக்கிறது. மேலும் ஹரி படங்களில் அருவா இருக்கும். மேலும் எனக்கு கதை தெரியும் என்பதால் படத்திற்கு இந்தத் தலைப்பு பொறுத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.