எம்.ஜி.பி. மாஸ் மீடியா நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் நவீன் தயாரிப்பில், இயக்குநர் மித்ரன் R ஜவஹர் இயக்கத்தில், அறிமுக நாயகன் ஈஷான் மற்றும் அறிமுக நாயகி ப்ரணாலி நடிப்பில், கமர்ஷியல் திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “அரியவன்”. மார்ச் 3 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் மற்றும் திரை பிரபலங்கள் கலந்து கொண்டு, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இவ்விழாவினில் இயக்குநர் பாக்யராஜ் பேசியதாவது,..
அரியவன் படம் டிரெய்லர் நன்றாக உள்ளது எல்லோருக்கும் வாழ்த்துக்கள். எப்போதும் நம் மனதில் சில பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும். அந்த வகையில் தமிழகத்தில் பல காலமாக ஒலித்த பாடல் கண்கள் இரண்டால் பாடல். ஜேம்ஸ் வசந்தனின் அந்தப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். இந்தப்படத்திலும் அருமையான பாடல் தந்துள்ளார். அவருக்கு என் வாழ்த்துக்கள். இயக்குநர் மித்ரனுடன் உத்தம புத்திரன் படத்தில் வேலை பார்த்துள்ளேன். மிக நல்ல மனிதர் சாந்தமானவர். அவர் புது முகத்தை வைத்து எடுக்கிறார் என்றால் கண்டிப்பாகக் கதை மிக நல்ல கதையாக இருக்கும் எனும் நம்பிக்கை உள்ளது. புது ஹீரோவை வைத்து தைரியமாகப் படமெடுத்த தயாரிப்பாளர் நவீனுக்கு நன்றி. நாயகனுடைய கண் உயிரோட்டமாக இருக்கிறது. அவர் நல்ல படங்கள் செய்து வெற்றி பெற வாழ்த்துக்கள். படத்தில் உழைத்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
எம்.ஜி.பி. மாஸ் மீடியா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து வழங்குகிறது.
இந்தப்படத்தில் அறிமுக நாயகன் ஈஷான் மற்றும் அறிமுக நாயகி ப்ரணாலி ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் டேனியல் பாலாஜி, சத்யன், கல்கி ராஜா, ரமா, ரமேஷ் சக்ரவர்த்தி, காவ்யா,சூப்பர் குட் சுப்பிரமணி, ரவி வெங்கட்ராமன் உள்படப் பலர் நடித்திருக்கின்றனர்.