Tamil Movie Ads News and Videos Portal

Are you ok baby- விமர்சனம்

தனது அக/புற சூழலால் பெற்ற குழந்தையை விற்பனைப் பொருளாக மாற்றிவிட்ட தாய் மீண்டும் அக்குழந்தையை அடைய நடத்தும் போராட்டமே கதையின் ஒன்லைன்

பெற்றக் குழந்தையை அந்தப் பெண்..அதாவது நாயகி முல்லையரசி எதற்காக மற்றவரிடம் வளர்க்க கொடுக்கிறார்? வளர்க்கும் தம்பதிகளான அபிராமி, சமுத்திரக்கனி கூட்டணி எப்படி அந்தக் குழந்தையோடு அட்டாச் ஆகிறார்கள்? குழந்தை மீட்பு போராட்டம் என விரியும் பிரச்சனைகளின் முடிவு என்ன? ஆகிய கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது படத்தின் திரைக்கதை

மெயின் லீடில் நடித்துள்ள முல்லையரசி மிகச்சிறப்பாக நடித்துள்ளார். அவரது கேரக்டருக்கான எழுத்தில் அழுத்தமும் நியாயமும் இல்லாததால் அவரது நல்ல நடிப்பு முழுமையாக அவருக்குப் பயன் தருமா என தெரியவில்லை. வளர்ப்புத் தாயாக வரும் அபிராமி மிக சிறப்பானதொரு நடிப்பைக் கொடுத்துள்ளார். செயற்கையாக மார்பில் பாலூற வைத்து அதை குழந்தைக்கு ஊட்டிவரும் ஒரு நேரத்தில் குழந்தை தன்னிடம் இல்லாத சூழல் வருகிறது. அந்நிலையில் ஊறிய பாலோடு அவர் தவிக்கும் இடத்தில் ஒரு தேர்ந்த நடிகையாக அசத்தியுள்ளார். சமுத்திரக்கனி வழக்கம் போல் இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார். படத்தின் இயக்குநரான லெட்சுமி ராமகிருஷ்ணன் தனது ட்ரேட்மார்க் ஹோஸ்டர் கேரக்டரை தரமாகச் செய்துள்ளார். பாவல் நவகீதன் உள்ளிட்ட அனைவரும் இயல்பான நடிப்பை கொடுத்துள்ளனர்.

இசையொலியை கதை எந்த இடத்திலெல்லாம் கேட்குறது என்பதை உணர்ந்து இசை அமைத்துள்ளார் இளையராஜா. பாடல்கள் ஓகே ரகம். கிருஷ்ணசேகரின் ஒளிப்பதிவு கேரளா& தமிழ்நாடு நிலப்பரத்தை அழகாக காட்டியுள்ளது.

கதை ஆழமாக எழுதப்பட்டிருந்தாலும் திரைக்கதையும் கதாப்பாத்திரங்களுக்கான நியாய தர்மங்களும் சில சமரசங்களை கொண்டிருக்கிறது. இருந்தும் நச் நச் என நெஞ்சில் பதியும் வசனங்களும் சில காட்சிகளும் இந்த பேபியை ரசிக்க வைக்கிறது

Are you ok baby?
“Fine”
3/5
-மு.ஜெகன் கவிராஜ்