தமிழ்த் திரையுலகின் இரு பெரும் நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் ஆகியோரின் படங்கள் பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வந்தது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படம் “தர்பார்”, பொங்கல் தினத்திற்கு இரண்டு தினங்களுக்கு முன்பே வெளியானது. தனுஷ் நடிப்பில் வெளியான ‘பட்டாஸ்’ திரைப்படம் பொங்கல் தினத்திற்கு ஒரு நாள் விட்டு, வெளியானது.
வேறு எந்தவொரு நடிகர்களின் படங்களும் வெளியாகாத நிலையிலும் கூட, இரு படங்களும் போதிய வரவேற்ப்பைப் பெறத் தவறி இருக்கிறது. ரசிகர்களை மட்டுமே திருப்திபடுத்தும் படங்களாக அமைந்த இவை, விடுமுறை தினத்தின் போது வெளியிடப்பட்டும் கூட எதிர்பார்த்த வசூலைப் பெறத் தவறியிருப்பது, திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் படத்தயாரிப்பாளர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது. தனுஷ் நடிப்பில் இதற்கு முன்னாள் வெளியான ‘அசுரன்’ படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற போதும், கூட பட்டாஸ் வரவேற்பைப் பெறாததன் பின்னணியில் உள்ள சூட்சமத்தை இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் புரிந்து கொள்ளுவது நலம்.