இயக்குநராக மட்டுமே நின்றுவிடாமல் தனது ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து பேட்ட படத்தை இயக்கி முடித்த கார்த்திக் சுப்புராஜ் தற்போது தனுஷ் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி முடித்திருக்கிறார். மேலும் தனது தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் கதை நாயகியாக நடிக்கும் ஒரு படம், வைபவ் நாயகனாக நடிக்கும் ஒரு படத்தையும் தயாரித்து வருகிறார். மேலும் மலையாளத்தில் ’சோளா’ என்ற பெயரில் வெளியான திரைப்படத்தை தமிழில் “அல்லி” என்ற பெயரிலும் மொழிமாற்றம் செய்து வெளியிட இருக்கிறார். இது குறித்து அவர் கூறும் போது, “தரமான படங்களை மக்களின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இது போன்ற படங்களை வெளியிடுகிறேன்..” என்று குறிப்பிட்டுள்ளார்.