இப்பொழுதெல்லாம் நாயகிகள் நாயகனோடு டூயட் பாடும் வேடங்களில் நடிப்பதை விட, கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் வேடங்களில் நடிப்பதில் தான் ஆர்வம் காட்டி வருகிறார்கள். நயன், த்ரிஷா, சமந்தா, கீர்த்தி சுரேஷ், அனுஷ்கா ஆகியோரின் வரிசையில் ரெஜினாவும் இணைந்துவிட துடித்து வருகிறார். கவர்ச்சிக்கு குட்-பை சொல்லிவிட்டு கனமான கதைக்களம் இருக்கும் படமாக தேடிப் பிடித்து நடித்து வரும் அவர், “செவன்’ படத்தில் நடித்தார்.
அப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத போதிலும் மனம் தளராமல் அடுத்த முயற்சியாக “சூர்ப்பனகை” திரைப்படத்தை கையில் எடுத்துள்ளார். இப்படத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளராக புதை படிவங்களை தோண்டும் கதாபாத்திரம் கசாண்ட்ராவுக்கு. அதனால் விளையும் பிரச்சனைகளைக் கொண்டு இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் ட்ரீ நிறுவனம் சார்பில் ராஜ்சேகர் வர்மா தயாரிக்கும் இப்படத்தை கார்த்திக் ராஜு இயக்குகிறார். இது சந்திரமுகி போன்ற ஒரு பலி வாங்கும் அம்சமுள்ள திரைப்படம் என்று கூறியிருக்கிறார் இயக்குநர்.