இந்தியாவின் மிகப்பெரிய ஓடிடி தளமான ஜீ 5, பல்வேறு இந்திய மொழிகளில், சிறந்த படைப்புகளைத் தயாரித்து வருகிறது. ‘மலேஷியா டு அம்னீஷியா’ ‘டிக்கிலோனா’ ‘விநோதய சித்தம்’ உள்ளிட்ட பல தரமான படைப்புகளை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்த ஜீ5 மேலும் பல சிறந்த பொழுதுபோக்கு படங்களை சந்தாதாரர்களுக்கு அளிக்க திட்டமிட்டுள்ளது.
அதன் வரிசையில், கடந்த மாதம் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்து வசூல் சாதனை புரிந்த ‘அரண்மனை 3’ திரைப்படம் நவம்பர் 12அன்று ஜீ5 ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது. சுந்தர்.cயின் இயக்கி நடித்துள்ள இப்படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, விவேக், யோகி பாபு, சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடித்துள்ள இப்படத்தை சந்தாதாரர்களுக்கு அளிப்பதில் ஜீ5 மகிழ்ச்சி கொள்கிறது.