Tamil Movie Ads News and Videos Portal

சுந்தர்.சி-யின் குஜராத் ”அரண்மனை”

- Advertisement -

2014ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் வினய், ஆண்ட்ரியா, ஹன்சிகா, லட்சுமி ராய், சுந்தர்.சி ஆகியோர் நடித்த திரைப்படம் அரண்மனை. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகமும் வெளியானது. அதில் த்ரிஷா, சித்தார்த், ஹன்சிகா, சுந்தர்.சி ஆகியோர் நடித்த இந்தப் படமும் ஹிட்டானது. இதனையடுத்து இப்படத்தின் மூன்றாம் பாகம் தற்போது தயாராகவுள்ளது. சுந்தர்.சி இயக்கும் இப்படத்தில்

ஆர்யா, ராஷி கண்ணா ஆகியோர் நாயகன் நாயகியாக நடிக்கின்றனர். மேலும் ஆண்டிரியா, யோகி பாபு, விவேக் ஆகியோருடன் சுந்தர்.சியும் இப்படத்தில் நடிக்கவிருக்கிறார். முந்தைய இரு பாகங்களைப் போன்றே இப்படமும் காமெடி கலந்த திகில் படமாக உருவாகவிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் 20 முதல் குஜராத் மாநிலத்தில் தொடங்கவிருக்கிறது.

- Advertisement -

Get real time updates directly on you device, subscribe now.