Tamil Movie Ads News and Videos Portal

”அனுஷ்கா நிச்சயம் தேசியவிருது பெறுவார்” – ஹேமந்த் மதுர்கர்

’இஞ்சி இடுப்பழகி’ படத்தினால் எடை கூடிய அனுஷ்கா, பாகுபலி படத்தின் படப்பிடிப்பின் போது, தன் குண்டான உடல்வாகால் பல பிரச்சனைகளை சந்தித்தார். பின்னர் பல்வேறு சிகிச்சைகளுக்குப் பிறகு தன் பழைய அழகை மீட்டெடுத்திருக்கும் அனுஷ்கா தற்போது ஹேமந்த் மதுர்கர் இயக்கத்தில் ‘நிசப்தம்’ படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார்.

த்ரில்லர் வகைப்படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மாதவன் அனுஷ்காவுடன் இனைந்து நடித்திருக்கிறார். மேலும் அஞ்சலி ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படம் ஜனவரி 31ல் வெளியாகுமென்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது இப்படத்தின் வெளியீடு பிப்ரவரி 21ல் தள்ளிப் போகிறது. இது குறித்து சிலர் தவறான தகவல்களைப் பரப்பி வரும் நிலையில் இயக்குநர், “படம் குறித்து யாரும் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம். நாங்கள் ஒரு மிகச்சிறந்த தயாரிப்புடன் வெளிவரவிருக்கிறோம். நிசப்தம் படத்திற்காக அனுஷ்கா கண்டிப்பாக தேசிய விருது வெல்வார் என்பது நிச்சயம்..” என்று கூறியிருக்கிறார்.