’கொரோனா வைரஸினால் பலரும் பாதிக்கப்பட்டு இருக்கும் சூழலில் பலரும் பலருக்காக கண்கலங்கி வருகின்றனர். நடிகை அனுஷ்காவும் இது போன்ற பாதிப்புகளில் சிக்கி இருக்கும் மனிதர்களுக்காக கண் கலங்குபவர் தான். ஆனால் தற்போது அவர் கண்கலங்கி இருப்பது இயக்குநர் கோடி ராமகிருஷ்ணாவின் மறைவை எண்ணி ஆகும். சமீபத்தில் தெலுங்கு டிவி சேனல் ஒன்றில் விரைவில் வெளியாகவிருக்கும் அனுஷ்காவின் நிசப்தம் படத்தின் படக்குழுவினர் பேட்டி அளித்தனர்.
அப்பொழுது திரை வரலாற்றில் 16ம் ஆண்டில் வெற்றிகரமாக நுழையும் அனுஷ்காவைப் பாராட்டி ஒரு வீடியோ கானொலி ஒளிபரப்பானது. அதில் இடம் பெற்றிருந்த கோடி ராமகிருஷ்ணாவின் புகைப்படத்தினைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்ட அனுஷ்கா, கண்கலங்கியதோடு, அவர் இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருந்திருக்க வேண்டும்” என்றும் தன் ஆதங்கத்தினை வெளிப்படுத்தினார். கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் வெளியான அருந்ததி படம் தான் அனுஷ்காவின் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.