Tamil Movie Ads News and Videos Portal

மிக கவர்ச்சியான நடிகையாக அனுஷ்கா சர்மா தேர்வு

ஆரம்பத்தில் சினிமாத் துறையில் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் நடிகைகள் இவர்களின் உழைப்பை ஊக்குவிக்கும் பொருட்டு அரசு சார்பில் விருது வழங்கப்பட்டது. பின்னர் தனியார் நிறுவனங்கள் கூட தங்களின் நிறுவனம் சார்ந்த விளம்பரங்களுக்காக சினிமாத் துறையினருக்கு விருதுகள் வழங்குவதை தொடங்கின. தற்போது இது போன்று விளம்பரங்களுக்காக வழங்கப்படும் விருதுகள் ஏதேதோ காரணங்களை முன்னிட்டு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் பாலிவுட்டில் மிக கவர்ச்சியான நடிகை யார்..? மிக அழகாக ஆடை அணிபவர் யார்..? என்ற இரு பிரிவுகளில் விருது வழங்கப்பட்டிருக்கிறது. மிக கவர்ச்சியான நடிகையாக அனுஷ்கா சர்மாவும், கண்களைக் கவரும் வகையில் ஆடைகள் அணிவதில் அலியா பட்-டும் விருதுகளை வென்றிருக்கின்றனர். இந்த விருதுகளை ஒரு பிரபலமான ஆங்கிலப் பத்திரிக்கை வழங்கியிருக்கிறது.