Tamil Movie Ads News and Videos Portal

”தான் குண்டான பெண் இல்லை” – நிருபித்த அனுஷ்கா

வரலாற்றுப் படங்களுக்காகவே ஜனனம் எடுத்த நாயகி என்று சொல்லும் அளவிற்கு அனுஷ்காவின் கம்பீரமும் அழகும் அமைந்திருக்கிறது. இதனால் தானோ என்னவோ முக்கியமான வரலாற்றுப் படங்கள் அனைத்திலுமே அனுஷ்கா நீக்கமற இடம்பெற்று வந்தார். யார் கண் பட்டதோ..? சில வருடங்களுக்கு முன்னர் ‘ஸீரோ சைஸ்” என்ற படத்தில் நடிப்பதற்காக தன் எடையை அதிகரித்தார்.

மீண்டும் அவரால் பழைய எடைக்கு திரும்ப முடியவில்லை. பாகுபலி 2 படத்தில் அவரை பிரத்யேகமான VFX காட்சிகளின் மூலம் ஒல்லியானவராக காட்டினார்கள். பின்னர் பல மருத்துவ மற்றும் யோகா சிகிச்சைக்குப் பின்னர் அவர் தன் உடல் எடையை குறைத்தார். தற்போது மீண்டும் “நிசப்தம்” என்ற படத்தில் மாதவன், ஷாலினி பாண்டே ஆகியோருடன் இணைந்து நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில் மீண்டும் அனுஷ்கா உடல் எடை குறையவில்லை, அவரை சிறப்பு VFX காட்சிகள் மூலமாகவே ஒல்லியாக நிசப்தம் படத்தில் காட்டியிருக்கிறார்கள் என்ற வதந்தி பரவியது. இதைப் பொய்யாக்கும் விதமாக பத்திரிக்கை நிருபர்களை நேரில் சந்தித்து, தான் குண்டான பெண்ணில்லை என்பதை நிருபித்து, வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அனுஷ்கா.