பிரேமம் படத்தின் மூலம் அனைவரும் அறிந்த நடிகையாக மாறிய அனுபமா பரமேஸ்வரன் தனுஷ் நடிப்பில் வெளியான ‘கொடி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி வைத்தார். அவருக்கு இன்னும் சொல்லிக் கொள்ளும்படியான வெற்றி தமிழ்ப்படவுலகில் அமையவில்லை என்றாலும் கூட, தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார். தற்போது கண்ணன் இயக்கத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக “தள்ளிப் போகாதே’ படத்தில் நடித்து வருகிறார்.
சில தினங்களுக்கு முன்னர் தனது பிறந்தநாளை கொண்டாடிய அனுபமா பரமேஸ்வரன் சிம்பிளாக 24 என்ற எண்ணைப் பதிவிட்டு, ஒரு பிறந்தநாள் கேக் ஒன்றை பதிவிட்டு இருந்தார். பெரும்பாலும் நாயகிகள் அனைவரும் தங்களின் வயதை மறைக்கும் இந்தக் காலத்தில் வெளிப்படையாக வயதினைக் கூறி பிறந்தநாள் கொண்டாடும் அனுபமாவிற்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.