கொடைக்கானல் லொக்கேசன், ஒரு ரிசார்ட், அங்கு சில இளம் பெண்கள், இளம் ஆண்கள், தெரிந்த முகம் வேண்டுமென்பதால் சத்யராஜ் என பேக்கேஜ் செய்யப்பட்டுள்ள இப்படத்தின் கதை என்ன?
ரிசார்ட்டுக்கு வந்த பெண்களில் இரு பெண்கள் காணாமல் போகிறார்கள். விசாரிக்க வருகிறார் காவல் அதிகாரி சத்யராஜ். அந்த விசாரணையில் வரும் சம்பவங்கள் தான் படத்தின் கதை
நாயகன் ஸ்ரீபதி தன்னால் முடிந்தளவிற்கு நடிக்க முயற்சித்துள்ளார். பெண் கேரக்டர்கள் எல்லாமே வீக்-அக எழுதப்பட்டுள்ளதால் யாருடைய நடிப்பும் வொர்க்கவுட் ஆகவில்லை. மூன்று நாள் டேட் வாங்கி ஒரே காட்யூமில் சத்யராஜ் போர்ஷனை முடித்துள்ளார்கள். அவரும் கடமைக்கு நடித்துத் தள்ளியுள்ளார்.
இசையில் துளியும் மெனக்கெடவில்லை இசை அமைப்பாளர். மோகன் டச்சு தான் ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார். கிரியேட்டிவாக காட்சிகளில் எதுவுமே தென்படவில்லை. கிரியேட்டிவ் இயக்குநராக பணியாற்றி, திரைக்கதை அமைத்திருக்கிறார் இப்படத்தின் நாயகன் ஸ்ரீபதி. அவரும் முத்திரைப்பதிக்கத் தவறியிருப்பதால் அங்காரகன் ஆங்காங்கே நம்மை நித்திரைக்குத் தள்ளுகிறார்… நூறு ஆண்டுகளுக்கு முன் நடந்த கதையோடு நிகழ்கால சம்பவங்களை க்ளைமாக்ஸில் தொடர்பு படுத்திய உத்திக்காக மட்டும் பாராட்டலாம்
2/5
-மு.ஜெகன் கவிராஜ்