வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டக் கூடியவர் நடிகை ஆண்ட்ரியா ஜெரிமியாக். இவர் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘வட சென்னை’ படத்தில் இயக்குநர் அமீருக்கு ஜோடியாக அவரது மரணத்திற்குப் பின்னர் அமீரின் சகாவாக வரும் சமுத்திரக்கனியை திருமணம் செய்து குடும்பம் நடத்தும் கதாபாத்திரத்தில் நடித்த் இருந்தார். இப்படம் வெளியாகி சில மாதங்களுக்கு பின்னர் வெளியான பேட்டி ஒன்றில் அக்கதாபாத்திரத்தில் நடித்தது தவறு என்றும் கூறி இருந்தார்.
இருப்பினும் இந்த கருத்து ஆண்ட்ரியா மற்றும் வெற்றிமாறன் இருவருக்குமான நட்பில் எந்தவித முரணையும் ஏற்படுத்தவில்லை என்று தெரிகிறது. ஏனென்றால் தற்போது வெற்றிமாறன தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் நாயகியாக ஆண்ட்ரியா நடிக்கவுள்ளார். புதுமுக இயக்குநரான ஆனந்த் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் நடிப்பது குறித்துப் பேசிய ஆண்ட்ரியா, வெற்றிமாறன் உடனான நட்பின் அடிப்படையில் இப்பட வாய்ப்பு தனக்கு கிடைத்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.