Tamil Movie Ads News and Videos Portal

‘அனல் மேலே பனித்துளி’ சோனி லிவ் வெளியாகிறது!

சோனி லிவ் ஓடிடி தளம் வட்டார ரீதியிலான படங்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய வகையில் தற்போது ‘அனல் மேலே பனித்துளி’ படத்தை வெளியிட இருக்கிறது. இந்தக் கதை எதிர்பாராத விதமான கதைக்களத்துடனும் திருப்பங்களுடனும் பாலியல் வன்புணர்வில் இருந்து மீண்ட ஒருவர் எவ்வாறு தன் வாழ்வை கடந்து வருகிறார் என்பதை இந்தக் கதை சொல்கிறது. வெற்றிமாறன் தயாரித்திருக்கக்கூடிய இந்தத் திரைப்படம் இந்த மாதம் நவம்பர் மாதம் 18ம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

சென்னையைப் பின்னணியாகக் கொண்ட இந்தக் கதை, நீதிக்கான போராட்டத்தின் வழியில் தன்னை மாற்றிக் கொள்ளாத மதியின் (ஆண்ட்ரியா ஜெரிமையா) கடினமான கதையைக் கூறுவதாக அமைந்துள்ளது. இதுமட்டுமல்லாது, இந்த வழக்கை மதி கைவிட்டு தன் வழக்கமான வாழ்க்கையைத் தொடர வேண்டும் என்று விரும்புவர்களையும் காட்சிப்படுத்துகிறது. இந்தத் தடைகளை எல்லாம் தாண்டி தன்னுடைய கடைசி மூச்சு இருக்கும் வரை மதி இந்த வழக்கிற்காக போராடுவாளா அல்லது பாதியிலேயே கைவிடுவாளா என்பதைப் பற்றி எல்லாம் தெரிந்து கொள்ள ‘அனல் மேலே பனித்துளி’ படத்தில் மதியின் பயணத்தைப் பாருங்கள்.

#analmelepanithuli