தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான “அசுரன்” படத்தின் அசுரத்தனமான வெற்றி அப்படத்தினை பல மொழிகளிலும் ரீமேக் செய்ய தயாரிப்பாளர்களை முடுக்கிவிட்டிருக்கிறது. தற்போது “நாரப்பா” என்ற பெயரில் தெலுங்கில் அசுரன் படத்தின் ரீமேக் உருவாகி வருகிறது. இதில் தனுஷ் நடித்த கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடித்து வருகிறார்.
மஞ்சு வாரியர் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் ஸ்ரேயா நடிக்கவிருக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில், தீடிரென்று அவருக்குப் பதிலாக ப்ரியாமணி அந்த வேடத்தில் நடிக்கத் தொடங்கினார். இந்நிலையில் தற்போது அசுரன் படத்தில் தனுஷின் அக்காள் மகளாகவும் இளமை காலக் காதலியாகவும் அம்மு அபிராமி நடித்த வேடத்தில் அமலாபால் நடிக்கவிருக்கிறார் என்கின்ற தகவல் வெளியாகியுள்ளது.