Tamil Movie Ads News and Videos Portal

அமிகோ கேரேஜ்- விமர்சனம்

ஒரு சாதா மாணவன் ஸ்பெசல் சாதா டான்-ஆக மாறும் படம்.

ஹீரோ டான் ஆகும் கதைகள் டன் கணக்கில் வந்திருந்தாலும் சில டண்டனக்கா வித்தியாசத்தை காட்ட முயற்சித்துள்ளார் இயக்குநர் பிரசாந்த் நாகராஜன். பள்ளியில் ஆசிரியர் அடித்து விடுவதால் கோபப்படும் ஹீரோ மகேந்திரன், லோக்கல் டானிடம் சொல்கிறார். லோக்கல் டான் ஆன ஜி.எம்.சுந்தர் வாத்தியாரை கூட்டி வந்து கொமட்டிலே குத்துகிறார். அதன்பின் இன்னொரு முக்கிய புள்ளியான தசரதியுடன் ஹீரோ மோதுகிறார். அந்த மோதலின் தீவிரமும் முடிவும் என்ன என்பதே படத்தின் கதை

சிறுவர்களை குறிக்கும் மாஸ்டர் என்ற பதத்தை இதமாக துடைக்க முயற்சித்து வரும் நடிகர் மகேந்திரன், முழு ஹீரோவாக தன்னை முன்னிறுத்தியுள்ள படம் இது. ஹீரோவாக தாங்க முடியாத பாரத்தை தாங்க முயற்சித்துள்ளார். ஜி.எம்.சுந்தர் நடிப்பு படத்திற்கு பெரும் ஊக்கச்சக்தி. ஆதிரா, தீபா பாலு, தசரதி உள்ளிட்ட எல்லா நடிகர்களும் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்துள்ளனர்

பாலமுரளிபாலு இசை அமைத்துள்ளார். பின்னணி இசை நன்று. பாடல்கள் ஓகே. விஜயகுமார் சோலைமுத்துவின் ஒளிப்பதிவு நல்ல குவாலிட்டியுடன் அமைந்துள்ளது

பார்த்துப் பழகிய கதையில் சிலபல புதுசுகளைச் சேர்த்துச் சொருகியுள்ளார் இயக்குநர். திரைக்கதையை செழுமையாக்க இன்னும் உழைப்பைப் போட்டிருக்கலாம். சின்னச் சின்ன டீடெய்லிங் மூலம் பின்பாதியை இன்னும் அழகு படுத்தியிருந்தால் கேரேஜ் டேமேஜ் ஆகியிருக்காது
2.5/5
-மு.ஜெகன் கவிராஜ்