Tamil Movie Ads News and Videos Portal

“அம்புலிமாமா ரேஞ்சில் இருக்கிறது” – பாரதிராஜா கிண்டல்

தமிழ் சினிமாவில் இயக்குநர் இமயம் என்று அழைக்கப்படுபவர் இயக்குநர் பாரதிராஜா. இவரது ஆரம்பகால படங்களான 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், முதல் மரியாதை போன்ற படங்கள் இன்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி படம் இயக்க வேண்டும் என்ற ஆவலுடன் வரும் இயக்குநர்களுக்கு பால பாடமாக இருந்து வருகின்றன. தற்போது ’மீண்டும் ஒரு மரியாதை’ என்ற படத்தை இயக்கி வரும் பாரதிராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.

அந்த சந்திப்பின் போது, செய்தியாளர்கள், “உங்கள் இயக்கத்தில் வெளியான ‘சிவப்பு ரோஜாக்கள்’ படம் இன்றளவும் பார்ப்பதற்கு ரசனையுடன் இருக்கிறது. ஆனால் தற்போது வரும் த்ரில்லர் வகைத் திரைப்படங்கள் அப்படி இல்லையே..?? ஏன்” என்று கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த பாரதிராஜா ’தற்போது ஏதோ அம்புலிமாமா ரேஞ்சில் படம் இயக்குகின்றனர்” என்று கிண்டல் செய்தார்.