அமலாபாலின் பொய்யாட்டம் என்றதும் ஏதோவென்று நினைத்துவிட வேண்டாம். கன்னடத்தில் இருந்து டப்பிங் செய்து வெளியிடப்படும் ஒரு படத்தின் பெயர் தான் பொய்யாட்டம்.. ‘ஆடை படத்தில் நடித்ததில் இருந்து பெரிதாக எந்த வாய்ப்புகளும் இல்லாமல் இருக்கும் அமலாபால் கன்னடத்தில் சுதிப் ஜோடியாக கிருஷ்ணா இயக்கத்தில் நடித்த
திரைப்படம் “ஹுப்ளி”. மருத்துவ உலகில் மாபியாக்களால் நடைபெறும் அட்டுழியத்தை தோலுரித்துக் காட்டிய இப்படம் தற்போது தமிழ் பேசவிருக்கிறது. தமிழில் ‘பொய்யாட்டம்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கும் இப்படத்தை செந்தில் ஆனந்த் என்பவர் வெளியிடுகிறார். படம் குறித்து அவர் கூறும் போது, “ஆடை படத்தில் அமலாபாலின் நடிப்பு பேசப்பட்டதைப் போன்று இப்படத்திலும் அமலாபாலின் நடிப்பு பேசப்படும்..” என்றார்.