‘சிந்துச் சமவெளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் அமலா பால். மைனா திரைப்படத்தின் மூலம் அவரின் அடையாளம் மாறியது. பின்னர் தெய்வத்திருமகள் படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குநர் ஏ.எல்.விஜய்- உடன் காதல் ஏற்பட்டு அவரைத் திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்தனர்.
சென்ற ஆண்டு இரத்தினக்குமார் இயக்கத்தில் “ஆடை” படத்தில் ஆடையின்றி நடித்த இவரின் துணிச்சலான நடிப்பு பாராட்டுக்களையும் விமர்சனங்களையும் ஒருங்கே பெற்றது. தற்போது ‘அதோ அந்தப் பறவை போல’ படத்தில் நடித்து வருகிறார். நடிகை அமலாபாலின் தந்தை பால் வர்கீஸ் (61) நேற்று மாலை திடீரென உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் இறுதிச்சடங்கு இன்று மாலை 3 மணியளவில் கேரள மாநிலம் குரும்பப்பட்டி செயிண்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் வைத்து நடைபெறவிருக்கிறது. தந்தையின் மறைவால் வாடும் அமலாபால் குடும்பத்திற்கு திரையுலகத்தினர் ஆறுதல் கூறி வருகின்றனர்.