சின்னத்திரை நட்சத்திரமாக இருந்து, தற்போது தமிழ் சினிமாவின் உச்சபட்ச நடிகர்களில் ஒருவராக உயர்ந்திருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் ‘பாணா காத்தாடி’ படத்தின் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ப்ளான் பண்ணிப் பண்ணனும்” என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டில் கலந்து கொண்டு பேசும் போது, “இப்படத்தின் நாயகனாக நடித்துள்ள ரியோ, இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் டிடி மற்றும் பேசிக் கொண்டிருக்கும் நான் மூவருமே சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்கள்.
மேலும் நாங்கள் மூவருமே பிப்ரவரி 12ல் பிறந்தவர்கள். இந்த மேடையில் அமர்ந்திருக்கும் அனைவருமே சின்னத்திரையில் பிரபலமானவர்கள். நாங்களெல்லாம் சின்னத்திரையில் இருக்கும் போது, ஒரு சினிமா மேடை கிடைக்காதா..? என்று ஏங்கி இருக்கிறோம். தற்போது இந்த மேடை முழுக்க சின்னத்திரை நட்சத்திரங்கள் நிரம்பியிருப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.” என்று பேசினார். ‘ப்ளான் பண்ணிப் பண்ணனும்” படத்தில் ரியோ ராஜ், ரம்யா நம்பீசன், ரோபோ சங்கர், விஜி சந்திரசேகர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.