“கொரோனா தொற்றால் மக்களின் துயர் துடைக்க நிவாரணம் வழங்கும் படி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைவருக்கும் பொதுவான ஒரு வேண்டுகோளை வைத்தார். அதைத் தொடர்ந்து தமிழ் நடிகர்களில் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட ஒரு சிலர் உதவிகளை வழங்கித் துவங்கியுள்ளனர். இந்நிலையில் நடிகர் அஜித்குமார் முதல்வரின் நிவாரண நிதிக்கு ₹50 லட்சமும் பிரதமர் நிவாரண நிதிக்கு ₹50 லட்சமும் வழங்கியுள்ளார்.
மேலும் தான் இயங்கி வரும் திரைப்படத்துறையின் தொழிலாளர்கள் நலன் கருதி பெப்ஸி யூனியனுக்கும் ₹25 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கியுள்ளார். முதல்வர் மற்றும் பிரதமர் வைத்த கோரிக்கைகளுக்கு அஜித் செய்துள்ள மரியாதை அவர் மீது பெரும் மரியாதையை ஏற்படுத்தியுள்ளது..