Tamil Movie Ads News and Videos Portal

வலிமை ஷுட்டிங் எப்போது?

- Advertisement -

உலகை ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ் தமிழ்சினிமாவின் நிலையை தட்டுத்தடுமாற வைத்துவிட்டது. மிகப்பெரிய படங்கள் எல்லாம் முடங்கிக் கிடக்கின்றன. விஜய்யின் மாஸ்டர் படம் பக்காவக ரெடியாகியும் கிடப்பில் கிடக்கிறது. சூர்யாவின் சூரரைப்போற்று படமும் ரிலீஸுக்குத் தயாராக இருந்தும் முடங்கிக் கிடக்கிறது. ரஜினியின் அண்ணாத்த படத்தின் சூட்டிங் இடையிலே நிற்கிறது. அதேபோல் அஜித்தின் வலிமை படத்தின் ஷுட்டிங்கும் அந்த நிலைமையில் தான் இருக்கிறது.

இப்போது பிரமதர் மே 3-ஆம் தேதி வரை ஊடரங்கை நீட்டிக்க உத்திரவிட்டுள்ளார். அதன்பின் தான் படங்களில் ஷுட்டிங் நிலவரம் தெரியவரும். ஊரடங்கு தளர்ந்த உடனே மாஸ்டர் சூரரைப் போற்று ஆகியப் படங்கள் ரிலீஸ் ஆகிவிடும். அதே சமயம் ரஜினியின் அண்ணாத்த படத்திற்கும் உடனே ஷுட்டிங் துவங்கிவிடும். ஆனால் நடிகர் அஜித் தனது படத்தின் ஷுட்டிங்கை இந்தக் கொரோனாவின் தாக்கம் முழுவதுமாக முடிந்த பிறகு தான் நடத்த வேண்டும் என்று கூறி இருப்பதாக தகவல். அதனால் வலிமை அடுத்த வருடத் தொடக்கத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்!

- Advertisement -

Get real time updates directly on you device, subscribe now.