தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இரண்டு பேராக உருவெடுத்து இருப்பவர்கள் நடிகர் அஜீத் மற்றும் விஜய். ஆனால் நாளுக்கு நாள் இவர்கள் ரசிகர்கள் செய்யும் சில காரியங்கள் எல்லை மீறிப் போய் ஏதேனும் சர்ச்சையை ஏற்படுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக அஜீத் ரசிகர்கள் நடிகை கஸ்தூரியிடம் எப்போதுமே இணையதளங்களில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள். சில சமயம் அருவெறுக்கும் வகையிலான கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றனர். இது தொடர்பாக அவர்களை கண்டிக்க வேண்டும் என்று கஸ்தூரி வெளிப்படையாக அஜீத்திடம் கேட்டுக் கொண்டப் பின்னரும் அவர் இது குறித்து எதுவும் பேசாமல் மவுனம் சாதித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகை குஷ்பு மற்றும் அவரது கணவர் சுந்தர்.சி ஆகியோர் இணைந்து பெப்சி அமைப்பினருக்கு உதவும் வகையில் ரூபாய் 5 இலட்சம் நிதியுதவி வழங்கினார். இதை டிவிட்டரில் தகவலாக பதிவிட,அதில் ‘விஜய் தமிழன்’ என்ற பெயரில் தன்னை அஜீத் ரசிகர் என்று சொல்லிக் கொண்டு உலா வரும் ஒரு நபர்,, “நீங்க தமிழ்நாட்டு மக்களுக்கு எல்லாம் எதுவும் உதவி செய்ய மாட்டீங்க.. அது சரி. கூத்தாடி கூட்டம் கூத்தாடிக்குத் தான உதவி பண்ணும்” என்று கமெண்ட் அடித்திருந்தார். இதில் கோபமான குஷ்பு, “உன்னைப் போன்ற ஒருவரை தன் ரசிகர் என்று சொல்லிக் கொள்ள நிச்சயம் அஜீத் வெட்கப்படுவார்” என்று பதிலடி கொடுத்துள்ளார். அஜீத் ரசிகர் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவர் ஒட்டு மொத்தமாக சினிமாத்துறையையே கேவலமாக பேசி இருப்பதால் அவர் அஜீத் ரசிகர் தானா..? இல்லை அவருக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்கு சிலர் செய்யும் சதி வேலையா..? என்ற கேள்வி எழுந்துள்ளது.