‘பாகுபலி’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இந்திய அளவில் மட்டுமின்றி உலகளவில் எதிர்பார்க்கப்படும் படமாக இயக்குநர் இராஜமவுலியின் அடுத்த படம் மாறியிருக்கிறது. ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடிப்பில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்ற ஆண்டே தொடங்கியது. தற்போது “ஆர்.ஆர்.ஆர்” என்று தற்காலிகப் பெயர் சூட்டி இப்படத்தை பலரும் அழைக்கின்றனர்.
மேலும் பாலிவுட் நட்சத்திரங்களான அலியாபட், அஜய் தேவ்கன் இருவரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. படப்பிடிப்பு பல்வேறு காரணங்களால் இடையில் தடைபட்டது. மேலும் இன்று வரை அஜய் தேவ்கன் மற்றும் அலியாபட் தொடர்பான காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்து வந்த நிலையில், நேற்று அஜய் தேவ்கன் ஆர்.ஆர்.ஆர் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அலியாபட் தொடர்பான காட்சிகள் எப்போது தொடங்கும் என்பது தெரியவில்லை. படப்பிடிப்பு தள்ளிச் செல்வதால் படம் வெளியாக காலதாமதம் ஆகும் என்று தெரிகிறது.