சமீபத்தில் வெளியான விக்ரம் படம் வசூலில் மற்ற படங்களை தன் அருகில் வரமுடியாத படி ராஜாங்கம் செய்துகொண்டிருந்தது. அதையும் மீறி ஆர்.ஜே பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி ஆகியோர் நடித்திருந்த வீட்ல விசேஷம் படம் தியேட்டர்களுக்கு மக்களை வரவைத்து விட்டது. பதாய் ஹோ என்ற இந்திபடத்தை அபிஷியலாக ரிமேக் செய்திருந்தாலும், படத்தை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றபடி அழகாக உருவாக்கியிருந்தார்கள் ஆர்.ஜே பாலாஜியும், சரவணனும். இப்படியொரு வரவேற்பு கிடைத்ததிற்கு பத்திரிகையாளர்களுக்கும் மக்களுக்கும் ஆர்.ஜே பாலாஜி நன்றி சொன்னார். மேலும் ஆர்.ஜே பாலாஜி இந்தப்படம் வசூலில் பெரிய லாபத்தை ஈட்டிருப்பதாகவும் சொன்னார். மேலும் நடிகர் விஜய்க்கு தான் ஒரு கதை சொல்லிருப்பதாகவும், லைனைக் கேட்டுவிட்டு, அவர் முழுதாக கதை எப்போது ரெடியாகும் என்று கேட்டதாகவும் சொன்னார். ஆக விஜய் நடிப்பில் ஆர்.ஜே பாலாஜி இயக்கும் புதியபடத்தின் அறிவிப்பு விரைவில் வரலாம்.