Tamil Movie Ads News and Videos Portal

ஐஸ்வர்யா ராஜேஷின் திட்டம் இரண்டு

சிக்ஸர் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் தினேஷ் கண்ணன், மினி ஸ்டுடியோ நிறுவனம் சார்பாக வினோத் குமார் ஆகிய இருவரின் தயாரிப்பில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதியபடம் திட்டம் இரண்டு.

“யுவர்ஸ் சேம்ஃபுல்லி” என்ற குறும்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த விக்னேஷ் கார்த்திக் இந்தப்புதிய படத்தை இயக்க இருக்கிறார். “மக்களுக்கு மிகவும் பிடித்த ஜானரான மிஸ்ட்ரி திரில்லர் கதையைச் சார்ந்த இப்படம், எதிர்பாராத திருப்பங்களைக் கொண்டதாக உருவாக இருக்கிறது.” என்கிறார் இயக்குநர். ஐஸ்வர்யா ராஜேஷ் லீட் ரோலில் நடிக்கும் மூன்றாவது படம் இது.

இப்படத்தின் கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் சிறப்பான டெக்னிக்கல் டீமும் இணைந்துள்ளது.

மான்ஸ்டர் பண்ணையாரும் பத்மினியும், மாஃபியா ஆகிய படங்களின் ஒளிப்பதிவாளர் கோகுல் பேனி படத்தின் ஒளிப்பதிவைக் கவனிக்கிறார். சமீபத்தில் வெளியான மாஃபியா படத்தில் இவரது ஒளிப்பதிவு அனைவராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது

மிஸ்ட்ரி திரில்லர் படங்களுக்கு இசை மிக முக்கியம். அதைப் பூர்த்தி செய்ய இருக்கிறார் சதீஷ் ரகுநாதன்.

இப்படத்தின் படப்பிடிப்பு முதல் ஷெட்யூல் முடிவடைந்த நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கொரோனா லாக்டவுன் முடிந்ததும் துவங்க இருக்கிறது.