Tamil Movie Ads News and Videos Portal

ஹிப் ஹாப் ஆதியுடன் இணையும் ஐஸ்வர்யா மேனன்

- Advertisement -

இயக்குநர் சுந்தர். சி தயாரிப்பில் ஹிப் ஹாப் ஆதி நாயகனாக நடித்து கடைசியாக வெளியான திரைப்படம் “நட்பே துணை”. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் ஹிப் ஹாப் ஆதி நாயகனாக நடிக்கும் படத்திற்கு “நான் சிரித்தால்” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அவினி மூவிஸ் சார்பாக சுந்தர்.சி தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ராணா இயக்குகிறார். இப்படத்தில் நாயகியாக நடிப்பதற்கு ஐஸ்வர்யா மேனன் தேர்வாகியிருக்கிறார். காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்திருந்த இவர், அதனைத் தொடர்ந்து, தீயா வேலை செய்யணும் குமாரு, வீரா, நேர் எதிர், தமிழ்ப்படம் 2 ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இவர் முதன்முறையாக நாயகியாக நடிக்கும் திரைப்படம் தான் “நான் சிரித்தால்”.

- Advertisement -

Get real time updates directly on you device, subscribe now.