“அக்னி சிறகுகள்” படத்தின் மாஸ் அப்டேட்
அருண் விஜய், விஜய் ஆண்டனி, அக்ஷரா ஹாசன் என வியப்பில் ஆழ்த்தும் நட்சத்திர கூட்டம் இணைந்திருக்கும் “அக்னி சிறகுகள்” திரைப்படம், இந்த ஆண்டின் உச்சபட்ச எதிர்பார்ப்பிகுரிய படமாக இருக்கிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. படத்தில் இணைந்திருக்கும் நட்சத்திரங்களால் மட்டுமன்றி படம்பிடிக்கப்படும் வித்திசயாசமான லொகேஷன்களாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது “அக்னி சிறகுகள்”. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் கொல்கத்தாவில் படமாக்கப்பட்டது. படத்தின் முக்கியமான பொறிபறக்கும் ஆக்ஷன் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டது. இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு ரஷ்யாவின் மாஸ்கோ, பீட்டர்ஸ்ஃபர்க் ஆகிய இடங்களிலும் அதனைத் தொடர்ந்து கஜகஸ்தானின் அல்மாட்டி நகரிலும் படமாக்கப்பட்டு வருகிறது. உச்சபட்ச ஆச்சர்யமாக கஜகஸ்தானில் படமாக்கப்படும் இந்தியாவின் முதல் படம் எனும் பெருமையை “அக்னி சிறகுகள்” பெற்றுள்ளது. கண்களுக்கு விருந்தளிக்கும் பிரமாண்ட விஷுவல்களும், அசரவைக்கும் மார்ஷியல் ஆர்ட்ஸ் சண்டை காட்சிகளும் அங்கு படமாக்கப்பட்டுள்ளது. ரசிகர்களை வியப்பிலாழ்த்தும் பெரு விருந்து காத்திருக்கிறது. தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் T சிவா படம் உருவாகி வந்திருக்கும் விதத்தால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார். இயக்குநர் நவீனின் அட்டகாச கதைசொல்லல் முறையும், அவரது குழு படத்தை ஒவ்வொரு அங்குலமாக செதுக்கியுள்ளதையும் பெருமளவு பாராட்டியுள்ளார். மேலும் இப்படம் கண்டிப்பாக தமிழ் ரசிகர்களுக்கு முன்னெப்போதும் கண்டிராத ஒரு பிரமாண்ட திரில்லர் அனுபவத்தை உலகத்தரத்தில் தரும் படைப்பாக இருக்கும் என்றார்.
அக்னி சிறகுகள் படத்தில் ரெய்மா சென், பிரகாஷ் ராஜ், ஜே எஸ் கே ஆகியோருடன் மேலும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள் நடராஜன் சங்கரன் இப்படத்திற்கு இசையமைக்க, K A பாட்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.