Tamil Movie Ads News and Videos Portal

ஏஜெண்ட் கண்ணாயிரம்- விமர்சனம்

டப்பா எஜெண்ட் எனச்சொல்லப்படும் ஹீரோ பக்கா ஏஜெண்டாக மாறும் கதை

சின்னச் சின்ன விசயங்களை டிடெக்டிவ் செய்து கண்டுபுடிக்கும் சந்தானம்..தன் தாய் வசிக்கும் ஊரில் தன் தாயின் மரணத்திற்குப் பின்னால் இருக்கும் ரகசியங்களையும், வேறு பல க்ரைம்களையும் கண்டுபுடிக்கும் கதையே ஏஜெண்ட் கண்ணாயிரம் கதை

“ஏஜெண்ட் கண்ணாயிரம் பீஸ் ரெண்டாயிரம்” என்று ஒரு இடத்தில் மிகப்பொருத்தமாக சந்தானம் ஒரு கமெண்ட் அடிக்கிறார். சந்தானத்தின் அந்த ஒரு கமெண்ட் மட்டும் தான் படத்தில் சிரிக்க வைத்தது. அவரது செண்டிமெண்ட் காட்சிகளும் காமெடி காட்சிகளும், புத்திசாலித்தனமான காட்சிகளும் இன்னும் புத்திசாலித்தனமாக எழுதப்பட்டிருக்கலாம்; எடுக்கப்பட்டிருக்கலாம்..
சந்தானத்தின் நடிப்பிற்கான மதிப்பீடும் இதுவே. ரியாஸ் வுமன் பைக்கில் லிப்ட் கேட்டு ட்ராவல் பண்ணும் பெண் போல ஏனோதானோவென நடித்துள்ளார். வேறு கேரக்டர்கள் யாரும் மனதில் நிற்கவே இல்லை. நன்றாக நடிக்கும் குரு சோமசுந்தரத்திற்கு இந்த நிலைமையா?

யுவன்சங்கர் ராஜா பாடல் பின்னணி இசை இரண்டிலும் படத்தைக் காப்பாற்றியுள்ளார். ஒளிப்பதிவில் பெரிய குறையுமில்லை நிறையுமில்லை. நிறைய மேட்ச் செய்ய வேண்டிய ஷாட்கள் எல்லாம் மிஸ் ஆகியுள்ளது. எடிட்டிங்கிலும் இன்னும் கவனம் எடுத்திருக்கலாம்

படத்தின் ஆதாரமே அம்மா செண்டிமெண்ட் தான். ஆனால் அது மருந்திற்கும் படத்தில் சொல்லப்படவில்லை. மிகச்சாதாரண ஏஜெண்ட் அதி புத்திசாலியாக காட்டப்படும் போது, அதை நாம் ஏற்கவேண்டுமானால் அழுத்தமான காட்சியமைப்புகள் இருக்க வேண்டும்.. கண்ணாயிரத்தில் அது எங்கு தேடியும் காணவேயில்லை..

“ஏஜெண்ட் கண்ணாயிரம் இதைப் பார்த்தா காண்டாயிரும்” என்று படம் பார்க்கும் நாமே பன்ச் அடிக்கும் வகையில் படம் நகர்கிறது. இது நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையை தன்மீது வைத்த இயக்குநர்…
நல்லாருக்கும் என நம்பும் ரசிகனின் நம்பிக்கையையும் மதிக்க வேண்டுமல்லாவா?

வேறொன்றும் சொல்வதற்கில்லை; பின்பாதி படம் பராவாயில்லை

2/5
-மு.ஜெகன் கவிராஜ்