அதிநவீன “அலாவுதீன்” தான் வைபவ்வின் “ஆலம்பனா”
விஸ்வாசம் படத்தைத் தயாரித்த கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் பாரி கே.விஜய் எழுதி இயக்கியிருக்கும் படம் “ஆலம்பனா”. அலாவுதீன் பூதத்தின் பின்னணியில் நவீன அறிவியலைக் கலந்து இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற வகையில் குழந்தைகளோடு சேர்ந்து பெரியவர்களும் ரசிக்கும் வண்ணம் பேண்டஸி வகைத் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் நடிகர் முனிஷ்காந்த் மற்றும் திண்டுக்கல் ஐ.லியோனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையை ஒட்டி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.