தான் தோன்றி வளர்ந்த இடத்தை மறந்து விடுவது மனித இனத்தின் இயல்பு என்பதை இயல்பாக பதிவு செய்துள்ளது அடவி திரைப்படம். அடவி என்றால் காடு. காடு தான் மனிதனின் ஆதியும் அந்தமும். அந்தக் காட்டை நாடாக்கி கூறுபோட்டு விற்பதால் எத்தனையோ விளைவுகளைச் சந்தித்து வருகிறோம். அடவி படத்தில் காடுகளை குறி வைக்கும் கார்ப்பரேட் அரசியலை அப்பட்டமாக காட்டியுள்ளனர்.
வினோத் கிருஷ்ணன் அம்மு அபிராமி, உளபட திரையில் தோன்றும் அனைவருமே படம் முடிந்த பின்னும் மனதில் தோன்றுமளவிற்கு சிறப்பாக நடித்துள்ளனர். படத்தில் இசையும் ஒளிப்பதிவும் தனித்துவமாக இருக்கிறது. இயக்குநர் ரமேஷ் ஜி தான் ஒளிப்பதிவையும் செய்துள்ளார். படத்தின் கதையை தயாரிப்பாளர் சாம்பசிவமே எழுதியுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு. எந்த லாப நோக்கத்தையும் மனதில் வைக்காமல் சமுதாய நலனுக்கான கதையாக இதை எழுதி இருக்கிறார்.
தெளிவான கதை, பொறுப்புள்ள தொழில்நுட்ப கலைஞர்கள், சிறப்பான நடிகர்கள் என எல்லாம் சரியாக அமைந்திருந்தாலும் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் அடவி இன்னொரு மேற்குத் தொடர்ச்சி மலையாக பரிணாமம் அடைந்திருக்கும்!
-மு.ஜெகன்சேட்