‘ஆடை’ என்று பெயரிடப்பட்ட படத்தில் ஆடையின்றி நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார் நடிகை அமலா பால். அவரின் இந்த தைரியமான முயற்சிக்கு பலன் பெரிதாக கிடைக்கவில்லை. இந்நிலையில் வெளியாகவிருக்கும் மற்றொரு புதிய படத்தில் ஐஸ்வர்யா தத்தா ஒரு காட்சியில் ஆடையின்றி நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அறிமுக இயக்குநர் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்” படத்தில் அர்ஜூனன், சாந்தினி, ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சுருக்கமாக பஃப்ஜி என்று அழைக்கப்படும் இப்படத்தின் டீஸர் விரைவில் வெளியாகவிருக்கிறது. இதனை நடிகர் ஜாக்கி ஷெராஃப் வெளியிடவுள்ளார். இப்படத்தில் தான் ஐஸ்வர்யா தத்தா ஒரு காட்சியில் ஆடையின்றி நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ ‘சத்ரியன்’ போன்ற படங்களில் நடித்த ஐஸ்வர்யா தத்தா பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.