Tamil Movie Ads News and Videos Portal

ரசிகர்களுக்கு ‘இரட்டை’ விருந்தளிக்கும் ஸ்ருதிஹாசன்!

‘உலகநாயகன்’ கமல்ஹாசனின் வாரிசாக இருந்தாலும், தன்னுடைய தனித்துவமான திறமையினால் திரை உலகில் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசனின் நடிப்பில் தயாராகி வரும் இரண்டு தெலுங்கு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது. மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘வால்டேர் வீரய்யா’ என்ற திரைப்படத்திலும், மாஸ் ஹீரோ பாலகிருஷ்ணா நடிப்பில் தயாராகி இருக்கும் ‘வீரசிம்ஹா ரெட்டி’ எனும் திரைப்படத்திலும் நடிகை ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த இரண்டு திரைப்படங்களும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சங்கராந்தி திருவிழா விடுமுறை தினத்தில் வெளியாகிறது. ஒரே நாளில் அவர் நடிப்பில் தயாராகி இருக்கும் இரண்டு படங்களும் வெளியாவதால், அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள். அத்துடன் ரசிகர்களுக்கு முதன்முறையாக அவர் இரட்டை பரிசினை வழங்குவதால் மகிழ்ச்சியடைந்த அவருடைய ரசிகர்கள், இதனை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

இதனிடையே நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது ‘கே. ஜி. எஃப்’ புகழ் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ எனும் திரைப்படத்திலும், ‘தி ஐ’ எனும் ஹாலிவுட் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.