Tamil Movie Ads News and Videos Portal

தெலுங்கில் நாயகியாகும் சஞ்சனா சாரதி !

தமிழில் “துப்பாக்கி” படத்தில் விஜயின் இளைய தங்கையாகவும், “எனை நோக்கி பாயும் தோட்டா” படத்தில் சிறு வேடத்திலும் நடித்த நடிகை சஞ்சனா சாரதி, இப்பொழுது தெலுங்கில், நவீன் சந்திரா நாயகனாக நடிக்கும் படத்தில் முழுநீள கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

நாயகியாக அறிமுகவாதில் பெரும் உற்சாகத்தில் இருக்கும் நடிகை சஞ்சனா சாரதி கூறியதாவது….தெலுங்கில் இது எனக்கு முதல் படம். படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்த, படக்குழுவினருக்கு எனது நன்றிகள். இது உணர்வுகள் நகைச்சுவை, காதல் மற்றும் உணர்வுகள் நிறைந்த கமர்ஷியல், குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்” என்று தெரிவித்துள்ளார்