Tamil Movie Ads News and Videos Portal

ஐஸ்வர்யா ஆர்.கண்ணன் இணையும் படம்!

கேரளா மக்களிடம் சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்ட” தி கிரேட் இந்தியன் கிச்சன் ” படத்தின் தமிழ்- தெலுங்கு மொழி ரீமேக் உரிமையை R. கண்ணன் வாங்கியுள்ளார். இதன் இரண்டு பதிப்பிலுமே ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஒரு பெண் படித்து பட்டம் பெற்று தனது கனவுகளை எல்லாம் திருமணத்துக்கு பிறகு நனவாக்குகிறாளா ? திருமணத்துக்கு பிறகு அவளது வாழ்க்கை எப்படியிருக்கிறது. கணவனும் புகுந்தவீட்டாரும் அவளை எப்படி நடத்துகிறார்கள் என்பதே இக்கதை. இந்த கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். மீண்டும் இவருக்கு ஒரு பெரிய பாராட்டுக்கள் குவியும் கேரக்டராக இது அமையும். இதன் படப்பிடிப்பு நேற்று முதல் சென்னையில் ஆரம்பமாகியது. முதல் நாள் படபிடிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்து கொண்டார்.