100 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரிய கொண்டது இந்திய சினிமா. சினிமாவும் சினிமாக்கலைஞர்களும் பிரபலம் அடைந்தது திரையரங்குகளால் தான். ஆனால் அப்படியான திரை அரங்குகளுக்கே ஆப்படிக்கும் வேலையைச் செய்துவிட்டது இந்தக் கொரோனா. தற்போது இருக்கும் சூழலைப் பார்த்தால் தியேட்டர் திறக்க நீண்டகாலம் ஆகும் என்பது போல் தெரிகிறது. மக்களும் ஆன்லைனில் படம் பார்க்கும் பழக்கத்திற்கு மாறி வருகிறார்கள். இதைக் கருத்தில் சில பெரிய நடிகர்கள் முக்கிய இயக்குநர்கள் எல்லாம் ஓடிடி ப்ளாட்பாரத்தில் களம் இறங்க முடிவெடுத்துள்ளனர். ஆல்ரெடி கெளதம் மேனென் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப்சீரிஸாக எடுத்திருந்தார். அந்த வரிசையில் தற்போது மணிரத்னம் அமேசானுக்காக ஒரு வெப்சீரிஸ் இயக்க இருக்கிறார். அதில் சூர்யா நடிக்க இருக்கிறார். முதன்முதலாக தமிழில் ஒரு பெரிய நடிகர் வெப்சீரிஸ் பக்கம் திரும்பி இருக்கிறார். அடுத்து விஜய்சேதுபதியும் லைனில் வருகிறாராம்.
அடேய் கொரோனா…