நடிகர் சங்கத்திற்கு கடந்த ஜுன் மாதம் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் நடிகர் நாசர் தலைமையிலான அணியும், இயக்குநர் பாக்யராஜ் தலைமையிலான அணியும் மோதின. சுமார் 2800க்கும் அதிகமானோர் வாக்களித்தனர். இதில் 66 பேர் தங்களது வாக்குரிமை முறைகேடாக பறிக்கப்பட்டதாக குற்றம் சாட்டினர். மேலும் பலர் தங்களுக்கு தபால் ஓட்டு மிக தாமதமாக கிடைத்ததால் தங்களால் ஓட்டளிக்க முடியவில்லை என்று
புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் நடந்து முடிந்த தேர்தலின் ஓட்டு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படாததால் நடிகர் சங்கத்தின் பணிகள் முடங்கின. உறுப்பினர்களுக்கான உதவித் தொகை கொடுக்க முடியாத அளவிற்கு நிதியும் குறைந்தது. மேலும் நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணியும் பின்னடைவை சந்தித்தது. இந்நிலையில் அரசாங்கம் நடிகர் சங்கப் பணிகளை மேற்பார்வையிட ஒரு நிர்வாகியை நியமித்தது. தற்போது வரும் 2ம் தேதியில் இது தொடர்பான வழக்கில் தீர்ப்பு வெளியாகு என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை மறு தேர்தல் நடக்கலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது.