Tamil Movie Ads News and Videos Portal

யோகிபாபுவை நெகிழ வைத்த பத்திரிகையாளர்

கடந்த 14 ஆண்டுகளாக சினிமா பிரபலங்கள் மற்றும் சினிமா ஊடகவியலாளர்களின் பிறந்ததினத்தை சினிமாக்காரர்களுக்கும் , ஊடகவியலாளர்களுக்கும் தனது PRK சினி காலண்டர் – செல்ஃபோன் குறுஞ்செய்திகள் மூலம் அனுதினமும் தவறாமல் ஞாபகப்படுத்தி ., ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பிறந்த தின வாழ்த்துகளை பகிர்ந்து கொள்ள செய்து வருபவர் ஊடகத்துறை சார்ந்த ‘ராயல்’ பிரபாகர்.

சினிமா வி.ஐ.பி.களின் பிறந்த தினத்தை பிறருக்கு ஞாபகப்படுத்தி அனைவரும் அன்றைய ‘பர்த்டே’பிரபலத்திற்கு வாழ்த்து சொல்ல காரணமாக இருப்பதோடு,
‘ராயல்’ பிரபாகர்., கடந்த சில ஆண்டுகளாக அன்றைய பர்த்டே பிரபலத்தின் ராசி, நட்சத்திரம் உள்ளிட்ட விவரங்களை முன்னமே கேட்டறிந்து தன் சென்னை , விருகம்பாக்கம் ஏரியாவில் உள்ள பிள்ளையார் கோவிலின் அர்ச்சகர் கையில்., அர்ச்சனை தட்டுடன் அந்த விவரங்களையும் கொடுத்து , அன்றைய தினம் சினிமா மற்றும் மீடியா நண்பர்கள் யாருடைய பிறந்தநாளோ., அவர்கள் பெயரில் அர்ச்சனையும் செய்து, விரும்புபவர்களுக்கு அந்த அர்ச்சனை பிரசாதத்தையும் தேடிச்சென்று கொடுத்து விட்டு வரும் வழக்கத்தையும் கொண்டிருக்கிறார்.

இப்படி, கடந்த சில ஆண்டுகளாக தன் பிறந்தநாளில் பிறர் பெருவாரியாக வாழ்த்து சொல்ல காரணமாகவும் இருந்து, அர்ச்சனை பிரசாதத்தையும் காலை நேரத்திலேயே கொண்டு வந்து தந்துவிட்டு, தன்னை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தி , அசத்தி விட்டு செல்லும் ‘ராயல்’ பிரபாகர்., தன் பெயரில் செய்யும் அர்ச்சனையை நேரில் காண ரொம்பவும் ஆவல் கொண்டிருந்த முன்னணி காமெடி நடிகர் ‘கம்’ கதாநாயகர் யோகிபாபு ., இன்று , தன் பிறந்தநாளின் போது குடும்பத்தோடு அந்த சென்னை விருகம்பாக்கம் விநாயகர் கோவிலுக்கு காலை நேரத்தில் நேரிலேயே வந்துவிட்டாராம் !

கொரோனோ தடை காலத்தில் கோவிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை … என்பதால் சென்னை, விருகம்பாக்கம்-கோயம்பேடு மார்கெட் சாலையில் அந்த விநாயகர் கோவில் வாசலிலேயே நம் ‘ராயல்’ பிரபாகருடன் தம்பதி சமேதரமாக நின்று, உள்ளே தன் பெயரில் நடந்த அர்ச்சனையை கண்டு களித்த யோகிபாபு., வெளியில் வந்து அர்ச்சகர் தந்த அர்ச்சனை பிரசாதத்தையும் மாலையையும் மனம் நெகிழ பெற்றுக்கொண்டு., கொரோனா தடை காலத்திலும் தன் பிறந்தநாளில் தன்னை கோவிலில் சாமி தரிசனம் செய்ய வைத்த நம் PRK சினி காலண்டர் & ராயல் சினிமா பிரபாகருக்கு நன்றி சொல்லி , தானும் முழுமுதற்கடவுளின் பூரண ஆசி பெற்று சென்றிருக்கிறார்.